Category: General
Total Songs: 20
வாழ்க வாழ்க பாரத தேசம் Tamil - தமிழ்
வாழ்க வாழ்க பாரத தேசம்
வாழ்க வாழ்க பாரத தேசம் - (2)
1. கட்சி கொடிகள் பல பல வகையாம்
தேசக் கொடியை காக்கவே அவையாம் - (2)
பாரத தேசம் சுதந்தர தேசம்
எத்தனை சலுகை! எத்தனை உரிமை!
வாழ்க வாழ்க பாரத தேசம் - 2
2. நாவின் மொழிகள் பல பல உண்டு
உள்ளத்தில் அனைவரும் இந்தியரல்லோ - (2)
அன்பெனும் மொழியில் அனைவரும் ஒன்றே
ஒற்றுமை, ஐக்கியம் உயர்விற்கு நன்றே
வாழ்க வாழ்க பாரத தேசம் - 2
3. நீரோ, பயிரோ நமதென வேண்டாம்
அனைத்து இந்தியர் சமமென வேண்டும் - (2)
ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்போம்
விட்டு நாம் கொடுப்போம், விரைந்து வளருவோம்
வாழ்க வாழ்க பாரத தேசம் - 2
4. உழவர், தொழிலாளர், வீரர், ஆசிரியர்
நாட்டின் நான்கு தூண்கள் என்றறிவோம் - (2)
அவர்களின் வாழ்வு அனைவரின் வாழ்வு
சிறப்பும் செழிப்பும் கண்களால் காண்போம்
வாழ்க வாழ்க பாரத தேசம் - 2
5. லஞ்சம், வரி ஏய்ப்பு, வேலை நிறுத்தம்
வன்முறை அனைத்தும் அகற்றியே வாழ்வோம் - (2)
கடத்தல் தொழிலில்லை, போதை பொருளில்லை
என்றொரு நாள்வர தீர்மானம் எடுப்போம்
வாழ்க வாழ்க பாரத தேசம் - 2
6. ஜாதி, மதம் என்ற சுவர்களை தகர்ப்போம்
மதமல்ல, மனிதனே முக்கியம் அறிவோம் - (2)
சிறுவர், இளைஞர் எதிர்காலம் காப்போம்
அன்பெனும் கயிற்றில் தாய்க்கொடி காண்போம்
வாழ்க வாழ்க பாரத தேசம் - 2
7. அனைவர்க்கும் சம அன்பு அருளும் பிதாவே
அனைத்திலும் தாய் பூமி செழித்திடச் செய்யும் - (2)
அதற்கு எங்கள் பங்கை செய்திடச் செய்யும்
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே
வாழ்க வாழ்க பாரத தேசம் - 2
Emil Jebasingh
இந்தியர் யார்? Tamil - தமிழ்
இந்தியர் யார்? இந்தியர் யார்?
இந்தியர் யார்? இந்தியர் யார்? - (2)
1. ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்
போராட்டம், வன்முறைக்கு உட்படாதவர்
தேசத்தின் வளர்ச்சிகளை கெடுக்காதவர்
அரசாங்க சட்டங்களை மீறாதவர்
அவரே உண்மை இந்தியர்கள்
உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! - (2) - இந்தியர் யார்?
2. பலவந்தம் செய்து மதம் மாற்றமாட்டார்
ஏமாற்றி கொள்கைகளை விற்கமாட்டார்
பிறரின் உரிமைகளை தடுக்கமாட்டார்
தேசத்தின் நல் எண்ணம் ஓங்கச் செய்வார்
அவரே உண்மை இந்தியர்கள்
உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! - (2) - இந்தியர் யார்?
3. தேசத்தின் உடைமைகளை களவுசெய்யார்
கருப்பு பணங்களை ஏற்கமாட்டார்
கொள்ளை அடித்து குவிக்கமாட்டார்
வரிகளில் வஞ்சம் செய்யமாட்டார்
அவரே உண்மை இந்தியர்கள்
உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! - (2) - இந்தியர் யார்?
4. குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்வார்
குறிப்பிட்ட கடமையில் தவறமாட்டார்
லஞ்சம் எதுவும் வாங்கமாட்டார்
சிபாரிசு, செல்வாக்கு நோக்கமாட்டார்
அவரே உண்மை இந்தியர்கள்
உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! - (2) - இந்தியர் யார்?
5. சுத்தம் சுகாதாரம் பாதுகாப்பார்
சாலை விதிகளை கடைப்பிடிப்பார்
ஒளித்தும் மறைத்தும் ஒன்றும் செய்யமாட்டார்
உண்மை பிரஜையாக செயல்படுவார்
அவரே உண்மை இந்தியர்கள்
உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! - (2) - இந்தியர் யார்?
6. ஏழைகள், அகதிகள் நலம் தேடுவார்
தான தர்மங்களில் பங்கெடுப்பார்
விலங்குகள், பறவைகள் பாதுகாப்பார்
தன்னைப்போல் பிறருக்கும் அன்பே செய்வார்
அவரே உண்மை இந்தியர்கள்!
உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! - (2) இந்தியர் யார்?
Emil jebasingh
www.jebasingh.com
அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே Tamil - தமிழ்
அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே
வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே
மெய்ப்பொருள் இயேசுவே...
உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும்
அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும் புலனாகும்
மெய்ப்பொருள் இயேசுவே...
1. நோன்பு, நேர்ச்சை பல பிரயாணம் செய்துமே
பாவத்தின் கூர்மையை வெல்ல முடியவில்லை
சோதனை நேரத்தில் உடல் உள்ளம் கறைப்பட
துக்கம் நிறைந்திட வாழ்வெல்லாம் சோக மயம்
நிம்மதி எங்கே? விடுதலை எங்கே?
என்றிடும் வேளையில் கல்வாரி கண்ணில் பட
மெய்ப்பொருள் இயேசுவே...
2. பாவமும் சாபமும் துரத்திடும் வேளையில்
கல்வாரி சிலுவையின் காட்சியில் மூழ்கிட
பலியாடாம் இயேசுவின் இரத்தத்தில் என் பாவம்
மன்னிக்கப்பட்டது, நம்பிக்கைப் பிறந்தது
சோதனை வேளையில் இயேசுவின் துணை கண்டேன்
பரலோக பாதையில் இணையற்ற இன்பம் பெற்றேன்
மெய்ப்பொருள் இயேசுவே...
3. காலமும் கடந்திடும் சீலமும் குறைந்திடும்
மனிதனின் வாழ்வு ஓர் மாபெரும் மாய்கையே
கல்வி, செல்வம், புகழ், பதவி ஆசைகள் பல
மரணம் வரும்போது மறைந்து ஓடிப் போகும்
உன் பாவமோ தூய்மையோ உன்னைத் துரத்திடும்
புதிய மனம் பெற சிலுவை வரை வந்து
மெய்ப்பொருள் இயேசுவே...
Emil jebasingh & vishwavani
www.jebasingh.com
அன்பின் உருவம் ஆண்டவர் Tamil - தமிழ்
1. அன்பின் உருவம் ஆண்டவர்
அழைக்கிறார் நீ அருகில் வா
தொய்ந்துபோன உன் வாழ்வினை
கேட்கிறார் நீ அருகில் வா
ஓடிவா நீ ஓடிவா
கண்கலங்கியே நீயே வா
தூரமாய் நிற்கும் உன்னைத்தான்
அழைக்கிறார் நீ அருகில் வா - 2
2. மனிதர் பலரை நம்பினாய்
பலமுறை தடுமாறினாய்
உற்றார் பெற்றார் அன்பெல்லாம்
கனவு போன்று அகலுமே - ஓடிவா
3. நண்பர் பலரும் இருப்பினும்
நாடும் அன்பைப் பெற்றாயோ
செல்வம் எல்லாம் மாய்கையே
உலகம் கானல் நீராமே - ஓடிவா
4. ஒருமுறை அன்பை ருசித்துமே
விழுந்துபோன நீ எழும்பிவா
பலமுறை துரோகம் செய்ததால்
இயேசுவின் கண்ணீர் துடைக்கவா - ஓடிவா
5. இன்னும் நொந்து போவானேன்
இன்றே அருகில் ஓடிவா
உள்ளம் குமுறும் உன்னையே
தள்ளேன் என்றார் ஓடிவா - ஓடிவா
Emil jebasingh
www.jebasingh.com
அதிசயமான ஒளிமய நாடாம் Tamil - தமிழ்
அதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம் - நான் வாஞ்சிக்கும் நாடாம் - என் (2)
1. பாவம் இல்லாத நாடு
ஒரு சாபமும் காணா நாடு
நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
உன்னதத்தில் ஓசன்னா - அல்லேலூயா - அதி
2. வித விதக் கொள்கையில்லை
பலப் பிரிவுள்ள பலகை இல்லை
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
எங்குமே அன்புமயம் - அன்புள்ளோர் செல்லும் - அதி
3. பிரச்சனை ஏதும் இல்லை
வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை
மொழி நிறம் ஜாதி பற்று உடையோர்
எவருமே அங்கு இல்லை - அன்பே மொழி - அதி
4. இயேசுவின் இரத்தத்தினால்
பாவம் கழுவினால் செல்லலாமே
இத்தனைப் பெரிய சிலாக்கியம் இழப்போர்
இப்பூமியில் எவரும் வேண்டாம் - இன்றே வாரீர் - அதி
Emil jebasingh
www.jebasingh.com
அந்த நாள் வந்திடும் Tamil - தமிழ்
அந்த நாள் வந்திடும் இந்த உலகம் நின்றிடும்
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும்
1. இந்த நாள் வாழ்பவர் பரிசுத்தத்தில் தேறட்டும்
எக்காளம் எடுத்து எச்சரிக்கை கூறட்டும் - (2)
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் - அந்த நாள்
2. இந்த நாள் வாழ்பவர் திறப்பின் வாசல் நிற்கட்டும்
பாவத்தில் ஊழ்பவர் ஊழ்கிடாமல் தடுக்கட்டும் - (2)
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் - அந்த நாள்
3. இந்த நாள் வாழ்பவர் திறந்த வாசல் காணட்டும்
இராக்காலம் வருமுன்னர் சுதந்தரித்துக் கொள்ளட்டும் - (2)
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் - அந்த நாள்
4. இந்த நாள் வாழ்பவர் ஆத்மாதாயம் செய்யட்டும்
அந்த நாள் வந்ததும் நட்சத்திரமாய் ஜொலிக்கட்டும் - (2)
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் - அந்த நாள்
Emil jebasingh & Team
www.jebasingh.com
அரியதோர் செய்தி பெற்றோம் Tamil - தமிழ்
அரியதோர் செய்தி பெற்றோம்
பெரியதோர் பொறுப்பும் ஏற்றோம்
தெரிந்தவர் கூறாவிட்டால்
தெரியாதோர் அறிவதெங்கே?
அங்கே ஆயிரம்
அறுவடை ஆயிரம்
இங்கே இயேசுவே
அடியவர் ஆயத்தம்
1. ஒன்றும் இல்லார் அதிகம் உண்டு
உண்டு களிக்க காலம் இல்லை
பங்குகளை அனுப்பவேண்டும்
எங்கும் மகிழ்ச்சி காணவேண்டும் - அங்கே
2. கண்ணீரோடு விதைத்த விதைகள்
நல்ல நிலத்தில் விழுந்த விதைகள்
சிறுக விதைத்தால் சிறுக அறுப்போம்
பெருக விதைத்தால் பெருக அறுப்போம் - அங்கே
3. ஆதி சபைகள் கண்ட வளர்ச்சி
அடியார் பணியில் காணச் செய்யும்
அப்போஸ்தலர்கள் பெற்ற முதிர்ச்சி
அடியேன் வாழ்வில் விளங்கச் செய்யும் - அங்கே
Emil jebasingh & Team
www.jebasingh.com
அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள் Tamil - தமிழ்
1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்
அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள்
இராஜாதி இராஜனாம் இயேசுராஜன்
பூமியில் ஆட்சி செய்வார்
அல்லேலூயா அல்லேலூயா
தேவனைத் துதியுங்கள்
2. தம்புரோடும் வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்
இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
எக்காளமும் கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்
எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள் - இராஜாதி
3. பிள்ளைகளே, வாலிபரே தேவனைத் துதியுங்கள்
வாழ்வதனை அவர்பணிக்கே கொடுத்துநீர் துதியுங்கள்
பெரியவரே, பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்
செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள் - இராஜாதி
4. ஆழ்கடலே, சமுத்திரமே தேவனைத் துதியுங்கள்
அலை அலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்
தூதர்களே, முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்
பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள் - இராஜாதி
Bro.Emil jebasingh & Team
www.jebasingh.com
அழகாய் நிற்கும் யார் இவர்கள் Tamil - தமிழ்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்
திரளாய் நிற்கும் யார் இவர்கள்
சேனை தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள் - (2)
1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
சிறிதானதோ பெரிதானதோ
பெற்றபணி செய்து முடித்தோர் - அழகாய்
2. தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்று நின்றவர்கள்
யாசித்தாலும் போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள் - அழகாய்
3. ஒன்றே ஒன்று என் வாஞ்சையாம்
அழகாய் நிற்போர் வரிசையில் நான்
ஓர் நாளினில் நின்றிடவும்
இயேசு தேவா வழிநடத்தும் - அழகாய்
Bro.Emil jebasingh & Team
www.jebasingh.com
அழைப்பின் சத்தம் தொனிக்கும் நேரம் Tamil - தமிழ்
அழைப்பின் சத்தம் தொனிக்கும் நேரம்
வாருங்கள் சேருங்கள் (2)
அழைக்கப்பட்டவர் அதிகம் அதிகம்
கீழ்ப்படிந்தவர் கொஞ்சம் கொஞ்சம் - அழைப்பின்
1. அறுப்பு மிகுதி ஊழியர் கொஞ்சம்
எஜமான் நம்மை ஜெபிக்கவே அழைக்கிறார் (2)
தானியேல் போன்ற முழங்கால் தேவை
கண்ணீர் கலந்த ஜெபங்கள் தேவை - அழைப்பின்
2. எழுபது பேரை அழைத்த கர்த்தர்
உன்னையும் என்னையும் அழைக்கிறார் அன்றோ (2)
பர்னபா, பவுலைப் புறப்பட அழைத்தார்
அவர்களின் சபையை அனுப்பிட அழைத்தார் - அழைப்பின்
3. காற்றைக் கவனிப்பார் விதைப்பதும் இல்லை
மேகத்தைப் பார்ப்பவர் அறுப்பதும் இல்லை (2)
வலைகளை எறியும் விசுவாசம் தேவை
சபைகளைக் கட்டும் தரிசனம் தேவை - அழைப்பின்
4. விளைந்த பயிர்களை அறுத்திடும் நேரம்
இணைந்து ஊழியர் உழைத்திடும் நேரம் (2)
இயேசுவின் வருகை நெருங்கிடும் நேரம்
உலகத்தின் முடிவு வந்திடும் நேரம் - அழைப்பின்
Bro.Emil jebasingh & Team
www.jebasingh.com
அன்பின் ஆண்டவரே ஆத்ம அமைதி தந்தீர் Tamil - தமிழ்
அன்பின் ஆண்டவரே
ஆத்ம அமைதி தந்தீர்
அன்பில் இறுக்கம்
பண்பில் ஒழுக்கம்
என்றும் காத்திடுவீர் - இயேசுவே -(2)
1. சொந்தப் பிள்ளையாக
எட்டிக் காயுமான
இந்தப் பாவியையும்
பங்கம் பாசம் காட்டி
அன்பிதோ துதிப்பேன்
அன்பிதோ மகிழ்வேன்
ஆத்ம அமைதி தந்தீர் - இயேசுவே
ஆத்ம அமைதி தந்தீர் - அன்பின்
2. வாழ்நாள் முடிவுவரை
தேவ பணிபுரிவேன்
கள்ளம் கபடு இன்றி
கர்த்தர் வழியில் செல்வேன்
அன்பிதோ துதிப்பேன்
அன்பிதோ மகிழ்வேன்
ஆத்ம அமைதி தந்தீர் - இயேசுவே
ஆத்ம அமைதி தந்தீர் - அன்பின்
Bro.Emil jebasingh & Team
www.jebasingh.com
அன்புள்ள இயேசையா உம்பிள்ளை நான் ஐயா Tamil - தமிழ்
அன்புள்ள இயேசையா
உம்பிள்ளை நான் ஐயா
ஆனந்த ஒளிபிறக்கும்
வாழ்வெல்லாம் வழிதிறக்கும் - 2
1. காடு மேடு ஓடிய ஆடு
என்று என்னை வெறுத்திடவில்லை - 2
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் - அன்புள்ள
2. பகலில் மேகம் இரவில் ஜோதி
பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு - 2
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் - அன்புள்ள
3. தாகம் தீர ஜீவ தண்ணீர்
உள்ளங்கையில் என்னையும் கண்டீர் - 2
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் - அன்புள்ள
Bro.Emil jebasingh & Team
www.jebasingh.com
ஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஸ்தோத்தரி Tamil - தமிழ்
ஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஸ்தோத்தரி
ஜீவனுள்ள தேவனைத் துதி -(3) - அல்லேலுயா
1. ஒன்று இரண்டு என்றல்ல
தேவன் தந்த நன்மைகள்
கோடா கோடா கோடியாகுமே
ஒன்று இரண்டு என்றல்ல
நீ செலுத்தும் நன்றிகள்
கோடா கோடா கோடியாகட்டும் - (2) - அல்லேலூயா
2. நாட்டிலுள்ள மக்களே
பூமியின் குடிகளே
என்னுடன் தேவனைத் துதியுங்கள்
கூட்டிலுள்ள பறவைப் போல்
சிக்கிக் கொண்ட நம்மையே
விடுவித்த தேவனைத் துதியுங்கள் - (2) - அல்லேலூயா
3. பெத்தலேகேம் வந்தாரே
கல்வாரிக்குச் சென்றாரே
இயேசு எனக்காய் ஜீவன் விட்டாரே
இம்மகா சிநேகத்தை
ஆத்துமாவே சிந்திப்பாய்
நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ - (2) - அல்லேலூயா
4. நானும் என் வீட்டாருமோ
போற்றுவோம் ஆராதிப்போம்
இயேசுவை என்றுமே சேவிப்போம்
எங்கள் பாவம் மன்னித்தார்
எங்கள் தேவை சந்தித்தார்
வருகை வரை நடத்திச் செல்லுவார் - (2) - அல்லேலூயா
Bro.Emil jebasingh & Team
www.jebasingh.com
இயேசு என் தலைவர் ஜீவனின் அதிபர் Tamil - தமிழ்
இயேசு என் தலைவர் ஜீவனின் அதிபர்
சந்தோஷம் சந்தோஷமே
இகத்தினில் அவர்போல் அன்பதாய்க் காப்பார்
யார் உண்டு சொல் மனமே! (2)
1.நாள் மட்டும் நடத்தினாரே
நன்மையால் சூட்டினாரே
கரம் நீட்டித் தூக்கினாரே
சுகம் சுகம் அவர் நிழலே
முகம் முகம் அவரைத் தரிசிக்கும் நாளே
எனக்கு ஓர் பொன்னாளே - (2) - இயேசு
2.இந்திய தேசம் வர
இளமையில் எழுந்து நின்றார்
சிறுவனே உட்கார் என்றார்
கேரியோ வென்று வந்தார்
மனிதனின் சிந்தை சோர்பு அளிக்கும்
உற்சாகம் செய்வார் இயேசு - (2) - இயேசு
3.ஆசையாய் ஆதரித்தோர்
சீற்றத்தால் அகன்றே போனார்
தேவனோ அவன் அருகில்
அதோனிராம் ஜட்சன் வென்றான்
மனிதரைச் சார்ந்தால் மண்வீடாய் போவாய்
தேவனைப் பற்றி நீ வாழ் - (2) - இயேசு
4.ஓசன்னா சொன்னோர் எங்கே?
ஓடிடேன் என்றோன் எங்கே?
சிலுவையின் சுமை தணிக்க
பழகியோர் யாரும் இல்லை
இறுதிவரை நான் உம் சார்பில் நிற்க
அருள் ஈயும் இயேசு நாதா - (2) - இயேசு
Bro.Emil jebasingh & Team
www.jebasingh.com
இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் Tamil - தமிழ்
இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்
நம் இயேசு இராஜாவே, இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம் - இயேசு
1. மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
இராஜபாதையைச் செம்மையாக்குவோம் - நம்
2. சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்
இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்
இந்தப் பார்முழுதும் இயேசு நாமத்தையே
எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம் - நம்
3. ஆவி, ஆத்துமா, தேகம் அவர் பணிக்கே
இனி நான் அல்ல, அவரே எல்லாம்
என முடிவு செய்தோம், அதில் நிலைத்திருப்போம்
அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம் - நம்
Bro.Emil jebasingh & Team
www.jebasingh.com
இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் Tamil - தமிழ்
இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும்
மேலான நாமம் இயேசுவின் நாமம்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் - (2)
1. துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும்
பேய் பிசாசின் தந்திரத்திற்கும்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் - இயேசுவின்
2. வல்லமைக்கும் கர்த்தத்துவத்திற்கும்
இம்மையிலும் மறுமையிலும்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் - இயேசுவின்
3. ஸ்தோத்தரிப்பீர் ஸ்தோத்தரிப்பீர்
விசுவாசிப்போர் ஸ்தோத்தரிப்பீர்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் - இயேசுவின்
Bro.Emil jebasingh & Team
www.jebasingh.com
இயேசுவின் வருகை இன்று Tamil - தமிழ்
1. இயேசுவின் வருகை இன்று
வெகு சமீபமாய் தெரிகின்றது
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
வெகு அவசியமாகின்றது
ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே
இயேசு கிறிஸ்து வருகின்றார்
ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே
இயேசு கிறிஸ்து வருகின்றார்
2. பாவத்தில் புரளுவதும், மா சாபத்தில் முடியும் அன்று - நீ - (2)
உன் வாழ்க்கையில் ஒரு திருத்தம் வெகு அவசியமாகின்றது - ஓ மானிடரே
3. அன்பினால் வரும் அழைப்பு நல்லதோர் எச்சரிப்பு - (2)
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வெகு அவசியமாகிறது - ஓ மானிடரே
4. தயவாக ஓடியே வா கிருபையின் வாசல் உண்டு - நீ - (2)
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வெகு அவசியமாகிறது - ஓ மானிடரே
Bro.Emil jebasingh & Team
www.jebasingh.com
இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார் Tamil - தமிழ்
இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்?
எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்
1. சுய வெறுப்பின் கோட்டிற்கு வா - நீ வா
நயமாக அழைக்கிறார் வா - நீ வா
உலக மாமிச ஆசை
வீண் எனத் தள்ளி விட்டு வா வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா - எந்தன்
2. எல்லாவற்றையும் விட்டு வா - நீ வா
எல்லாவற்றையும் விற்று வா - நீ வா
பிசாசின் வலையில் சிக்கி
பாழாய்ப் போய் விடாதே வா, வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா - எந்தன்
3. ஆசைகள் அனைத்தையும் அளித்திட வா - நீ வா
உன்னை சிலுவையில் பதித்திட வா - நீ வா
இச்சையின் வலையில் நீ
சிக்கி விடாதே வா வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா - எந்தன்
4. பின்பற்ற வருகிறேன் நான் - நானே
உம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் - நானே
இயேசுவே இறங்கிடும்
ஏற்றிடும் என்னையும் வந்தேன் வந்தேன்
இயேசுவைப் பின்பற்றுவேன் - எந்தன்
Bro.Emil jebasingh & Team
www.jebasingh.com
இராஜாதி இராஜன் இயேசு வருவார் Tamil - தமிழ்
1. இராஜாதி இராஜன் இயேசு வருவார்
சந்திக்க ஆயத்தமா?
வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார்
சந்திக்க ஆயத்தமா?
கேள்! கேள்! மானிடரே!
சிந்திக்க ஆயத்தமா?
இராஜாதி இராஜனாய் வந்திடுவார்
சந்திக்க ஆயத்தமா?
2. பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே
சந்திக்க ஆயத்தமா?
பரலோக வாழ்வின் நல்பாக்கியத்தை
சந்திக்க ஆயத்தமா? - கேள்! கேள்!
3. குத்தினோர் யாவரும் கண்டிடுவார்
சந்திக்க ஆயத்தமா?
கத்திக் கதறியே தாழிடுவார்
சந்திக்க ஆயத்தமா? - கேள்! கேள்!
4. உலகமனைத்துமே கண்டிடுமே
சந்திக்க ஆயத்தமா?
பரிசுத்தவான்களின் போர் நிற்குமே
சந்திக்க ஆயத்தமா? - கேள்! கேள்!
Bro.Emil jebasingh & Team
www.jebasingh.com
இருள் சூழும் காலம் இனி வருதே | | பாடல் வரிகள் Tamil - தமிழ்
1. இருள் சூழும் காலம் இனி வருதே
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்
திறவுண்ட வாசல் அடைபடும்முன்
நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்?
பல்லவி
திறவுண்ட வாசல் அடைபடும்முன்
நொருங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்?
நாட்கள் கொடியதாய் மாறிடுதே
காலத்தை ஆதாயம் செய்திடுவோம்
2. விசுவாசிகள் எனும் கூட்டம் உண்டு
அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு
ஒருமனம், ஒற்றுமை அங்கு உண்டு
என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும் - திறவுண்ட
3. இனிவரும் நாட்களில் நமது கடன்
வெகு அதிகம் விசுவாசிகளே
நம்மிடை உள்ள ஐக்கியமே
வெற்றியும் தோல்வியும் ஆகிடுமே - திறவுண்ட
4. இயேசுவே எங்கள் உள்ளங்களை
அன்பெனும் ஆவியால் நிறைத்திடுமே
இந்தியாவின் எல்லாத் தெருக்களிலும்
இயேசுவின் நாமம் விரைந்திடுமே - திறவுண்ட
Bro.Emil jebasingh & Team
www.jebasingh.com