Magizhven magizhven

மகிழ்வேன் மகிழ்வேன்

Artist: James Vasanthan

Album: Iravin Amaithiyil Yesuvodu

Category: General

Language: Tamil - தமிழ்


Download Song | Play | Share

By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
மகிழ்வேன் மகிழ்வேன் தினம்
அகமகிழ்வேன்
இயேசு இராஜன் என்
சொந்தமாயினார்

இந்த உலகத்துக்கே சொந்தக்காரர்
அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்

ஆ, ஆனந்தமே பேரானந்தமே

 இது மாபெரும் பாக்கியமே – இந்த

1. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்துவிட்டார்

தூரம் போயினும் கண்டு கொள்வார்

தமது ஜீவனை எனக்கும் அளித்து

ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்

2. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பில் இருந்து

என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்

என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை

அவர் வரும்வரைக் காத்துக்கொள்வேன்

3. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து

அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்

அவர் சமுகமதில் அங்கே அவருடனே

ஆடிப்பாடியே மகிழ்ந்திருப்பேன்
Credits

Original Song: Bro. Emil Jebasingh
Orchestration: James Vasanthan
Singer: Roshan Wesley
Programming: James Vasanthan
Studio: Miracle Sound Bay
Mix & Master: Vibin Baskar