Ennaiyum Ninaithirea

என்னையும் நினைத்தீரே

Artist: Manoharan M

Album: Manohara Geethangal

Category: General

Language: Tamil - தமிழ்


Download Song | Play | Share

By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
என்னையும் நினைத்தீரே, என்னையும் அழைத்தீரே - 2

எப்படி நான் நன்றி
சொல்லுவேன்,
என் நாதனுக்கு,
நன்றி சொல்ல நாட்கள்
போதாதே - 2

1, உளையான சேற்றினின்று
தூக்கியெடுத்திரே,
பரிசுத்த ரத்தத்தாலே கழுவித் துடைத்தீரே, - 2
எப்படி நான்..

2, பாவத்திலே மரித்து போன
என்னையும் நினைத்தீரே,
திரு ரத்தம் சிந்தியென்னை,மீட்டுக்கொண்டீரே, - 2
எப்படி நான்....

3, ஆத்துமாவை அழிவுக்கு
விலக்கி மீட்டீரே,
கன்மலையின் மேலே வைத்து பாதுகாத்தீரே - 2
எப்படி நான்...

4, அலைச்சலைக் கண்டீரே,
கண்ணீரைத் துடைத்தீரே,
கவலையை மாற்றி எம்மை,
கனிவுடன் தேற்றினீரே, - 2
எப்படி நான்...

5,புத்திரசுவிகாரத்தின் ஆவியை எனக்கு தந்து, தகப்பனே என்றழைக்கும்
உரிமையைத் தந்தீரே,
எப்படி நான்...
Credits

Lyrics ,tune & sung by :- Bro.Manoharan. M

Music :- Bro.Pedapati.Raj

Vocals :- REVATHI ,HANNAH, SAM JOEL,