Vaanathi Vaanangkalai

வானதி வானங்களை

Artist: Manoharan M

Album: Manohara Geethangal

Category: General

Language: Tamil - தமிழ்


Download Song | Play | Share

By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
வானாதி வானாங்களை,
விட்டு வந்த ராஜனிவர்,
வானத்துக்கும் பூமிக்கும்
ஏணி வச்ச தேவனிவர், - 2

1, தம்பூரு நானெடுத்து,
தரணியில் வாசிக்கையில், கிண்ணாரம் நானெடுத்து, உந்தன் நாமம் துதிக்கையில் - 2
ரெண்டு, மூன்று பேர் நடுவில்,
வாசம் செய்யும் ராஜனிவர்,
ஜெபத்துக்கு பதில் தரும்,
தேவாதி தேவனிவர்.
வானாதி வானாங்....... ,

2, ஸ்தோத்திர பலி நானெடுத்தால், உந்தனுக்கே மகிமையே,
துதிபலி நானெடுத்தால்,
சுகந்த வாசனையே, - 2
வானாகி, மண்ணாகி,
வழியாகி, ஒளியாகி,
ஊனாகி, உயிராகி, எனக்குள்ளே வந்தீரே,
வானாதி வானாங்....... ,

3, சித்தர்கள் கண்டுகொண்ட, பிரஜாபதியானவராம்,
நபிமார்கள் போற்றுகின்ற ஈசா நபியானவராம், - 2
வானத்துக்கு கீழேயும், பூமிக்கு மேலேயும்,ரட்ச்சிப்புக்கேதுவான
வேறு ஒரு நாமமில்லை,

வானாதி வானாங்..

4, நன்றி கெட்ட மாந்தருக்காய், பரிகாரமானவராம்
கேடு கெட்ட எந்தனுக்காய்,
சிலுவையில் பலியானார், மரணமே கூர் எங்கே ,
பாதளமே ஜெயம் எங்கே,
மரணத்தை ஜெயித்திட்ட.,
மன்னாதி மன்னனிவர்,
வானாதி வானாங்....... ,
Credits

LYRICS,TUNE & SUNG BY:- BRO. MANOHARAN.M
MUSIC :- BRO.JOSEPH DHANARAJ