Lyrics
உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்
எண்ணத்தில் தெளிவைப் பெறுவீர்
சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்
இயேசு தேடும் நபர் இவரே
1. பரமன் பேரிலே பற்று கொண்டோ ரெல்லாம்
எளிதில் புரிவார் அவரின் பாரத்தை
உலகின் பேரிலே இயேசுவின் அக்கறை
தமதாக்கியவர் வாழுவார், மாளுவார்!
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார் - உள்ளத்தில்
2. தேசங்கள் தீவுகள், பல பிராந்தியங்கள்,
பாவத்தால் நிறைந்து சாபமாகிறது
திறப்பின் வாயிலே, நிற்கத்தக்கதாக
தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ?
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார் - உள்ளத்தில்
3. செல்வம், சீர் சிறப்பு, நற்குடிப்பிறப்பு
செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து
யாவையும் பெறினும் சாகையில் என் செய்வீர்?
உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார் - உள்ளத்தில்
Credits
Produced by Bro. Emil Jebasingh