Lyrics
வாசல்களே தலைகளை உயர்த்துங்கள் அநாதி
கதவுகளே விலகியே நில்லுங்கள்
ஏன்?
இராஜா வருகிறார்,
யார்?
இயேசு ராஜா வருகிறார்
1. அலைகளெல்லாம் அவர்முன் அடங்கி நிற்கின்றது
உங்கள் தலைகளெல்லாம் அவர்முன் பணிந்து நிற்கட்டும் -(2)
குடைகளெல்லாம் அவர்முன் சுருட்டப்படட்டும் மனித
மகுடமெல்லாம் தரையில் குனிந்து வைக்கட்டும் - வாசல்களே
2. அவருக்கு ஆணையிட உலகில் மனிதர் இல்லை
அவருக்கு தடைவிதிக்க உலகில் நாவுகள் இல்லை -(2)
மனித பெருமையெல்லாம் ஒருநாள் மண்ணில் முடிவடையும்
பணியா தலைகளெல்லாம் ஒருநாள் தங்களைத் தான் அடிக்கும் - வாசல்களே
3. அவர் வரும்நாள் இன்னும் அதிக தூரம் இல்லை
அந்தோ உயிர்த்தெழும் நாள் மிகவும் சமீபமாயிற்றே -(2)
எரிநரகம் அல்லது என்றும் நித்தியம் மனிதர்
இறுதி பங்கு இதுவே தேவ சத்தியம் - வாசல்களே
Credits
Produced By Bro. Emil Jebasingh