Lyrics
1. வானை முட்டும் மரங்கள் மீது
சின்னப் பறவை அமர்ந்திருந்து
தேவன் மேல் ஓர் பாட்டுப்பாடி
என்னை நிற்கச் செய்தது
சிந்திக்கவும் வைத்தது
2. யானைகளின் கூட்டம் ஒன்று
ஓடை ஒன்றின் ஓரம் வந்து
நீளக்கையால் நீரை அள்ளி
மேலே நோக்கி வழங்கிற்று
‘நன்றி’ வழங்கிற்று
3. பறவைகளும் மிருகங்களும்
மறவாதும்மை துதிக்கும் நேரம்
பாவி நானும் பணிந்து வந்தேன்
சிலுவை மரத்தின் நிழலடியில்
‘இயேசுவே’ என்றேன்
4. எந்தன் சிருஷ்டி யாவற்றிலும்
மனிதர்தான் என் மனதில் பிரியம்
உன்னைத் தாழ்த்தி நீ வந்ததால்
என்னை உனக்குத் தருகிறேன்
‘எழுந்திரு’ என்றார்
5. உலகில் ஐந்து கண்டம் உண்டு
கோடிக் கோடி மனிதர் உண்டு
யாவருக்கும் என்னைக் கொடு
உன்னிடம் நானும் வருவேன்
‘போவாம் வா’ என்றார்
6. அன்று பிறந்த எங்கள் பணி
இன்று வரை தொடர்கின்றது
நானும் எந்தன் இயேசுவுடன்
எல்லா திக்கும் செல்கின்றேன்
எல்லோருக்கும் சொல்கின்றேன்
Credits
Produced By Bro. Emil Jebasingh